பா.ஜ.க. எஸ்.ஜி. சூர்யா மீது சேலம் போலீஸ் வழக்கு!

பா.ஜ.க. எஸ்.ஜி. சூர்யா மீது சேலம் போலீஸ் வழக்கு!
Published on

பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் எஸ்.ஜி. சூர்யா மீது சேலம் காவல்துறை புதியதாக ஒரு வழக்கு பதிந்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தேசியச் செயலாளர் அரவிந்த் மேனன் வெளியிட்டுள்ள அறிக்கை : 

”பா.ஜ.க. மாநில இளைஞர்  அணி தலைவர் சகோதரர் எஸ்.ஜி. சூர்யா மீது தி.மு.க. அரசு சேலம் நகரில் மீண்டும் ஒரு பொய்யான வழக்கைப் பதிவு செய்துள்ளது. கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற மகளிர் அணி ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டதாகக் கூறப்படும் அறிக்கையின் அடிப்படையில், “தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 30,000-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கர்ப்பமாகியுள்ளனர்” என அவர் பேசியதாக தெரிவிக்கப்படுகிறது.

உண்மைகளைப் பொதுவெளியில் எடுத்துரைத்ததற்காக, எஸ்.ஜி. சூர்யாவின் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்க முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு எதிரான செயலாகும். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.” என்று அரவிந்த் மேனன் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com