சிறைத் துறை டி.ஜி.பி. அதிரடி மாற்றம்- கைதிகள் தப்பிய விவகாரம்!

Sandeep Rathore
சந்தீப் ராய் ரத்தோர்
Published on: 

சிறைத்துறை டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 26ஆம் தேதி, தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடினர். அவர்களில் 15 பேரை போலீசார் தேடிக் கண்டுபிடித்த நிலையில், 2 பேர் தானாக வந்து சரணடைந்தனர்.

காணாமல் போன கைதிகளை 36 மணிநேரத்தில் போலீசார் மீண்டும் சிறைக்குக் கொண்டுவந்து சேர்த்தனர். இதேபோல, அண்மையில் புழல் சிறையில் இருந்தும் 2 கைதிகள் தப்பியோடினர்.

இந்த இரு சம்பவங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், இந்தப் பணியிட மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சந்தீப் ராய் ரத்தோர், மின்வாரிய லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். சிறைத் துறையின் புதிய டி.ஜி.பி.யாக சங்கரை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், சஞ்சய் மாத்தூர் குற்ற ஆவணப்பிரிவு டி.ஜி.பி.யாகவும், சோனல் சந்திரா தலைமையிட ஐ.ஜி.யாகவும், ரகுபதி கரூர் எஸ்.பி.யாகவும், ஸ்டாலின் தென்காசி எஸ்.பி.யாகவும், அசோக் குமார் மதுரை பயங்கரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி.யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram