சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து விவாதிக்க மேயர் பிரியா மறுத்த நிலையில், சிபிஎம் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாதந்திர மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது.
தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்குப் பிறகு நடக்கும் முதல் மாமன்ற கூட்டம் என்பதால், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கூட்டம் தொடங்கியதும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், அறவழியில் போராடிய தூய்மை பணியாளர் கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்தும், தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரியும், தனியார்மயத்தை கைவிட வலியுறுத்தியும் முழுக்கமிட்டு வெளிநடப்பு செய்தனர்.
இரண்டு கம்யூனிஸ்ட் கட்சியையும் சேர்த்து தலா இரண்டு கவுன்சிலர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.