அங்கப்பிரதட்சணம் செய்த சரத்குமார்
அங்கப்பிரதட்சணம் செய்த சரத்குமார்

மனைவி ராதிகா வெற்றி பெற அங்கப்பிரதட்சணம் செய்த சரத்குமார்!

மோடி பிரதமராகவும், மனைவி ராதிகா வெற்றிபெறவும் வேண்டி சரத்குமார் அங்கப்பிரதட்சணம் மேற்கொண்டார்.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாணிக்கம் தாகூர், பா.ஜ.க. சார்பில் நடிகை ராதிகா, தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், விருதுநகரில் உள்ள பராசக்தி மாரியம்மன் கோவிலில், மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டியும், நாடாளுமன்றத் தேர்தலில் ராதிகா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டியும் நடிகர் சரத்குமார் அங்கப்பிரதட்சணம் செய்துள்ளார்.

மேலும், மாரியம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டனர். சரத்குமார், ராதிகாவை காண ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com