சசிகலா கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்…‘என்கவுண்ட்டர்’ வெள்ளதுரைக்கு வாய்ப்பு!

வி.கே. சசிகலா
வி.கே. சசிகலா
Published on

சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 23 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தலில் ராமதாஸ் பாமகவுடன் சசிகலா கட்சி கூட்டணி அமைத்துள்ளது. சசிகலா கட்சிக்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது முதல் கட்டமாக 23 வேட்பாளர்களை சசிகலா அறிவித்துள்ளார். தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலமான கேரளாவின் தேவிகுளம் தொகுதியிலும் தனது கட்சி சார்பில் செல்லதுரை என்பவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளார் சசிகலா.

சசிகலா அறிவித்த 23 வேட்பாளர்கள்:

1. திருத்தணி-பி.எம்.நரசிம்மன்

2. கள்ளக்குறிச்சி (தனி)-எம்.ஆனந்தன்

3. சங்கரன்கோவில் (தனி)-வசந்தி முருகேசன்

4. மதுரை மத்தி-ப.சக்கரவர்த்தி

5. திருப்பரங்குன்றம்-தனபாண்டியன்

6. திருமங்கலம்-ப.ஜீவிதா நாச்சியார்

7. மேலூர்-பா.சோனியாகாந்தி

8. மானாமதுரை (தனி)-அகரம் க.திலக்ராஜ்

9. பரமக்குடி (தனி)-அமிர்தா பாலுசாமி

10. இராஜபாளையம்-அ.ஹரிஷ்

11. முதுகுளத்தூர்-ராம்குமார் பாண்டியன்

12. நாங்குநேரி- முன்னாள் போலீஸ் அதிகாரி ’என்கவுண்ட்டர்’ ச.வெள்ளத்துரை

13. தென்காசி-மு.பூசத்துரை

14. சிவகங்கை-பிரபு

15. குளச்சல்-எஸ்.கிறைஸ்ட் மில்லர்

16. சிவகாசி-நேஷனல் மு.கணேசன்

17. திண்டுக்கல்-பி.ராமுத்தேவர்

18. மயிலாடுதுறை-நா.சுதாகர்

19. மன்னார்குடி-சு.ராசுப்பிள்ளை

20. ஸ்ரீரங்கம்-அ. விஜய்

21. திட்டக்குடி (தனி)-இரா.பழனிவேல்

22. ஸ்ரீபெரும்புதூர் (தனி)-புருஷோத்தமன்

23. திருச்சி கிழக்கு-செ. நந்தக்குமார்

logo
Andhimazhai
www.andhimazhai.com