சாட்டை துரைமுருகன்
சாட்டை துரைமுருகன்

சாட்டை துரைமுருகன் திடீர் கைது!

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் திருச்சி காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல யூடியூபரும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியுமான சாட்டை துரைமுருகன், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி குறித்தும் தி.மு.க. குறித்தும் அவதூறாகப் பேசியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, திருச்சி திருச்சி சைபர் கிரைம் போலீசாரிடம் திமுகவினர் புகார் அளித்ததாக தெரிகிறது. அதன் அடிப்படையில், தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தங்கியிருந்த சாட்டை துரைமுருகனை திருச்சி காவல் துறையினர் இன்று கைது செய்துள்ளனர். அவரை திருச்சிக்கு அழைத்து வந்து விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

ஏற்கனவே, இதேபோன்று கலைஞர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com