தமிழ் நாடு
முன்னாள் மத்திய அமைச்சரும் தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் மீதான அமலாக்கத் துறையின் நடவடிக்கையை உச்சநீதிமன்றம் இரத்து செய்துள்ளது.
அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின்படி ஜெகத்ரட்சகன், அவரின் மகன், மகள் தொடர்புடைய நிறுவனங்களில் அமலாக்கத் துறை தேடுதல் சோதனை நடத்தியது. அதில் கணிசமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இச்சட்டத்தின்படி 89 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளும் கைப்பற்றப்பட்டன.
நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு 908 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
அந்த உத்தரவுகளுக்கு எதிராக ஜெகத்ரட்சகன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதில், முன்னைய உத்தரவுகளை இரத்து செய்ததுடன், உயர்நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை விரைந்து முடிக்கும்படியும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.