11-ம் வகுப்பு மாணவன் தற்கொலை... சாதி சொல்லித் தாக்குதல்!

11ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை
11ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை
Published on: 

சாதியைச் சொல்லி ஆசிரியர் இழிவுசெய்ததாலும் சக மாணவர்கள் அடித்ததாலும் பயந்துபோன 11ஆம் வகுப்பு மாணவன் கோவையில் தற்கொலை செய்துகொண்ட துயரம் அரங்கேறியுள்ளது.

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த மாணவன் அகிலன். அங்கு பணிபுரியும் ஆசிரியர் விஜயகுமா், வகுப்பில் பட்டியலின மாணவர்கள், மாட்டிறைச்சி உண்ணும் மாணவர்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்போது, 4 மாணவர்கள் எழுந்து நின்றுள்ளனர். அதைத் தொடர்ந்து, சக மாணவர்கள் சிலர் அகிலனின் சாதிப்பெயரைக் கூறி திட்டியும், அடித்தும் வந்துள்ளனர். இதுகுறித்து ஆசிரியர் விஜயகுமாரிடம் புகார் அளித்தபோது, அவர் சாதிய நோக்குடன் மாணவர்களைக் கண்டிக்கவில்லை.

பின்னர், மாணவன் அகிலன் தலைமையாசிரியர் அருண்குமாரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் மனவிரக்தியில் இருந்த அகிலன், வீட்டில் யாரும் இல்லாதபோது தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாணவனின் தந்தை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, ஆசிரியர் விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள தலைமையாசிரியர் அருண்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும், மாணவனை கேலி செய்த சக மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி, உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com