பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்

சென்னையில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்!

மழை வெள்ளத்தையொட்டி விடுமுறை விடப்பட்ட சென்னை மாவட்டப் பள்ளிகள் சனிக்கிழமைகளில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இதற்கான சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

ஜனவரி மாதத்தில் நாளை 6ஆம் தேதி, பொங்கலுக்குப் பிறகு 20ஆம் தேதி ஆகிய நாள்களிலும்,

பிப்ரவரி 3, 17 ஆகிய தேதிகளில் சனிக்கிழமையன்று பள்ளிகள் செயல்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடக்கப் பள்ளி முதல் மேனிலைப் பள்ளிவரை அனைத்து வகுப்புகளுக்கும் பொருந்தும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், சென்னையையொட்டிய திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் அந்தந்த வட்டார அதிகாரிகள் இதற்கான உத்தரவைப் பிறப்பிக்கலாம் என்றும் பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com