பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம்
பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம்

பள்ளிகள் திறப்பு ஜூன் 10-க்குத் தள்ளிவைப்பு- கட்சிகள் கோரிக்கையால் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை வெயில் மீண்டும் சுட்டெரித்துவரும் நிலையில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 6ஆம் தேதி தமிழக மாநில அரசு முறைப்படி இயங்கும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. ஆனால், கோடையின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளதால் புதுவையில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டது. 

அதைப் போல தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பை மாதத்தின் பின்பாதிக்குத் தள்ளிப்போட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் இராமதாசு கேட்டுக்கொண்டார். மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரியும் பள்ளித் திறப்பைத் தள்ளிவைக்கக் கோரினார். 

இந்த நிலையில், பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகளைத் திறக்கப்போவதாக அறிவித்துள்ளார். 

“தமிழ்நாட்டில் நிலவும் வெப்ப அலையின் காரணமாக, அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை ஜூன் 9ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அனைத்து வகைப் பள்ளிகளும் ஜூன் 10ஆம் தேதி திங்களன்று திறக்கப்படும்.” என்று பள்ளிக்கல்வி இயக்குநரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com