மேற்குத்தொடர்ச்சி மலை
மேற்குத்தொடர்ச்சி மலை

அடுத்த 5 நாள்கள் இந்த சுற்றுலாத் தலங்களுக்குப் போறீங்களா... உஷாரா இருங்க!

தமிழ்நாட்டிலிருந்து வரும் 22ஆம்தேதிவரை 5 குறிப்பிட்ட சுற்றுலாத்தலங்களுக்குச் செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. 

உதகை,தேக்கடி,தென்காசி, கொடைக்கானல், ஒகேனக்கல் ஆகியவை உட்பட மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்குச் செல்பவர்களுக்கு இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் அடுத்த ஐந்து நாள்களுக்கு கன மழையோ அதிக கன மழையோ பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இந்தப் பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அதிக கவனத்துடனும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடனும் இருக்குமாறு பேரிடர் மேலாண்மைத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com