திமுகவுடன் தொகுதிப் பங்கீடு; குழு அமைத்தது சிபிஎம்!

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு; குழு அமைத்தது சிபிஎம்!
Published on

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுக்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன.

திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தைக்காக காங்கிரஸ் கட்சி கடந்த டிசம்பர் மாதம் ஐவர் குழுவை அமைத்தது. அந்தக் குழுவில் கிரிஷ் சோடங்கர், சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா , செல்வப்பெருந்தகை, ராஜேஷ்குமார் இடம் பெற்றிருந்தனர். இக்குழு, திமுக தலைவரான முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசியிருந்தது.

இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 22-ந் தேதி முதல் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என திமுக அறிவித்தது. திமுகவின் பேச்சுவார்த்தை குழு தொடர்பாக நேற்று முன்தினம் சென்னையில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி இருந்தார்.

இந்த நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை குழுக்களை அறிவித்து வருகின்றன.

சிபிஎம் பேச்சுவார்த்தை குழு:

பெ.சண்முகம்

கனகராஜ்

சாமுவேல்ராஜ்

கண்ணன்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேச்சுவார்த்தை குழு:

காதர் மொய்தீன்

நவாஸ் கனி

அப்துல் ரகுமான்

அபூபக்கர்

ஷாஜஹான்

logo
Andhimazhai
www.andhimazhai.com