முடிவுக்கு வந்தது இடைநிலை ஆசிரியர் போராட்டம் !

முடிவுக்கு வந்தது இடைநிலை ஆசிரியர் போராட்டம் !
Published on: 

சம வேலை சமஊதியம் கோரிக்கையை வைத்து போராட்டம் நடத்திவந்த இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர். இன்று முதல் பணிக்குத் திரும்புவதாக அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இன்று காலையில் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் காகர்லா உஷா, ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், அடுத்த மூன்று மாதங்களுக்குள் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்டு தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்திக்கொள்வதாக ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் ஊடகத்தினரிடம் தெரிவித்தனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com