“10 நிமிடம் பேசுவதையே சனிக்கிழமை வரைக்கும் மனப்பாடம் பண்ணணும்” - சீமான் கலாய்!

நாதக சீமான்
நாதக சீமான்
Published on

''10 நிமிஷம் தான் பேச அனுமதி கேக்குறாங்க, இதையே சனிக்கிழமை வரைக்கும் மனப்பாடம் பண்ணணும், நடிச்சு பாத்துட்டு வந்து பேசணும்'' என விஜயை கடுமையாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக சாடினார்.

ராமநாதபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் சீமான் பேசியதாவது: “கொள்கை தலைவர் என்று நீ (விஜய்) அறிவித்துள்ளவர்களின் கொள்கை பற்றி பேசு. காமராஜர் பற்றி 10 நிமிடம் பேசு... வேலு நாச்சியார் குறித்து 10 நிமிடம் பேசு. நீ மொத்தமாக பேச அனுமதி கேட்குறதே 10 நிமிடம் தான்.

திருச்சியில் பேசுறதுக்கு 10 நிமிடம் தான் கேட்டு இருக்காங்க. அரசே கூடுதலாக 5 நிமிடம் கொடுத்து இருக்கிறது. இதுக்கு சனிக்கிழமை வரை மனப்பாடம் பண்ண வேண்டும். நடித்து பார்த்து வந்து பேச வேண்டும்.

பாஜக உன் கொள்கை எதிரி. முதலில் உன் கொள்கையை சொல்லு. நான் எதிரா, இல்லையா என்று பார்க்கிறேன்.

பாஜவுக்கும், காங்கிரசுக்கும் என்ன கொள்கை வேறுபாடு என்று சொல்லு. பாஜக, காங்கிரஸ், அதிமுக, திமுக கொடியில் வண்ணம் மாறும். எண்ணம் மாறாது. கட்சி மாறும். கொள்கை மாறாது. திமுகவுக்கு மாற்று திமுக எப்படி இருக்க முடியும்? நெருப்பை எப்படி நெருப்பால் அணைக்க முடியும்?” இவ்வாறு சீமான் பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com