சீமான் வேட்பு மனு தாக்கல் செய்தார்!

சீமான் வேட்பு மனு தாக்கல் செய்தார்!
Published on

நா.த.க.தலைவர் சீமான் அவர் பிறந்த சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். 

முதலமைச்சர் வேட்பாளராக அறியப்படும் அவர், இன்று காலையில் தன்னுடைய வேட்பு மனுவைத் தாக்கல்செய்தார். 

தேவகோட்டையில் உள்ள தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் அவர் தன்னுடைய மனுவைச் சமர்ப்பித்தார். 

அப்போது, அவருடைய தாயாரும் மனைவியும் உடனிருந்தனர். 

மாற்று வேட்பாளராக சீமான் மனைவி கயல்விழியும் மனுத் தாக்கல் செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

பாக்கியராசன், சாட்டை துரைமுருகன் முதலிய நா.த.க. நிர்வாகிகள், ஆதித் தமிழர் அமைப்பின் வினோத் முதலிய பலரும் உடனிருந்தனர்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com