தமிழ் நாடு
“செங்கோட்டையன் அதிமுகவில் இல்லை. அதனால் பதில் சொல்ல அவசியம் இல்லை” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமியிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இல்லை. அதனால் அதற்கு பதில் சொல்ல அவசியம் இல்லை.. நன்றி வணக்கம்” என்றார்.