
விஜய் தலைமையிலான த.வெ.க. மூத்த நிர்வாகி செங்கோட்டையன் பழைய பழக்கத்தில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளருக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசுகையில், விஜய்யைப் பற்றி விவரித்துவிட்டு அவருக்காக வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
ஆனால், பழைய பழக்கத்தில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று குறிப்பிட்டவர், பின்னர் சுதாரித்துக்கொண்டு, இரட்டை இலைக்கே வாக்கு கேட்டு பழகிவிட்டது என்றார்.
ஓர் ஆயாவிடம் தனக்கு வாக்களிக்கக் கேட்டதாகவும் அவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிப்பதாகச் சொன்னார் என்றும், பிறகு தான் சொன்னபிறகே விசில் சின்னத்துக்கு வாக்களிக்கப் போவதாகக் கூறினார் என்றும் செங்கோட்டையன் சமாளித்துப் பேசினார்.