கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு மறைந்தார்!

ஆர். நல்லக்கண்ணு
ஆர். நல்லக்கண்ணு
Published on

கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான ஆர். நல்லகண்ணு (101), சென்னையில் இன்று உடல் நலக்குறைவால் காலமானார்.

எளிமையின் அடையாளமாக கருதப்பட்ட முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரான நல்லகண்ணு சென்னையில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி அவருக்குத் திடீரென மூச்சுத்திணறல் மற்றும் உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டன. இதனைத் தொடர்ந்து, அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட நுரையீரல் தொற்றுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி இன்று அவர் இயற்கை எய்தினார். இதை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com