திருச்சியிலிருந்து சார்ஜாவுக்குப் புறப்பட்ட விமானம் சக்கரம் மடிந்து உள்ளே அமுங்காததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இன்று மாலை 5.40 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஏஎக்ஸ்பி613 எனும் விமானம், மூன்று நிமிடங்கள் கழித்துப் புறப்பட்டது.
கிளம்பிய சிறிது நேரத்திலேயே அதன் சக்கரங்கள் உள்ளிழுக்கப்படாமல் இருப்பததைக் கண்டறிந்தார், விமானி. உடனே சுதாரித்த அவர் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவித்து விமானத்தைத் தரையிறக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
இதற்காக எரிபொருளைக் குறைக்கும் வகையில் திருச்சி வட்டார வான்பரப்பில் விமானத்தை வட்டமடிக்கச் செய்து வருகிறார்.
அந்த ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் 141 பயணிகளுடன் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக வட்டமடித்தபடி இருக்கிறது.
இதனிடையே விமான நிலையத்தில் 20 அவசர ஊர்திகள் நிறுத்தப்பட்டுள்ளன.
அவசர நிலைமையைச் சமாளிக்க ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.