எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த சிம்லா முத்துசோழன்
எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த சிம்லா முத்துசோழன்

ஜெ-வை எதிர்த்துப் போட்டியிட்ட சிம்லா முத்துசோழன் அ.தி.மு.க. வில் இணைந்தார்!

சென்னை ஆர்.கே. நகர் தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன் தி.மு.க. விலிருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை ஆர்.கே.நகர் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டபோது, தி.மு.க.வின் சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த சற்குணபாண்டியனின் மருமகள் சிம்லா முத்துசோழன் களமிறக்கப்பட்டார்.

அந்தத் தேர்தலில் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்றார். ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டதால், சிம்லா முத்துச்சோழன் தமிழகம் முழுவதும் பிரபலமானார்.

அதையடுத்து ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில் மீண்டும் சிம்லா முத்து சோழனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்குப் பதிலாக மருதுகணேஷ் என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

தொடர்ந்து, முக்கியத்துவம் கிடைக்காத நிலையில் இருந்துவந்த சிம்லா முத்துசோழன், கட்சிப் பணிகளில் பங்கேற்காமல் விலகியபடியே இருந்தார்.

தற்போது மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், சிம்லா திடீரென நேற்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, அக்கட்சியில் இணைந்துகொண்டார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com