முதல்வரே பேசுங்கள்... முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது !

Singer Arivu Arrested
பாடகர் அறிவு கைது
Published on: 

நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி சென்னை தலைமைச் செயலகம் முன்பு முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் நீட் தேர்வு தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு மைய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், 'தெருக்குரல் அறிவு' என்று அழைக்கப்படும் பிரபல ராப் பாடகர் அறிவரசு கலைநேசன், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னை தலைமைச் செயலகம் முன்பு முழக்கமிட்டார்.

"நீட் தேர்வை தடை செய்ய வேண்டும்; இதுகுறித்து முதல்வர் பேச வேண்டும்" என்று முழக்கங்களை எழுப்பினார்.

'எஞ்சாய் எஞ்சாமி' பாடல் மூலம் மக்களிடையே பிரபலமானவர் பாடகர் அறிவு. இவர் த.வெ.க. கட்சியின் கொடிப் பாடலை எழுதி, இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திடீரென்று தலைமைச் செயலகம் முன்பு நின்று முழக்கமிட்ட இவரை போலீசார் கைதுசெய்தனர்.   

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com