தமிழ் நாடு

பிரபல பட்டிமன்ற நடுவரும் தமிழ்ப் பேராசிரியருமான சாலமன் பாப்பையா மதுரையில் இன்று காலமானார். அவருக்கு வயது 90.
பன்னிரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பட்டிமன்ன்றங்களில் கலந்துகொண்ட அவர், கடந்த 5ஆம் தேதியன்று சிவகாசியில் கடைசியாக பட்டிமன்றம் ஒன்றை நடத்தினார்.
அதைத் தொடர்ந்து, அவருக்கு காய்ச்சல் கண்டு உடல்நலக் குறைவுக்காக சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில், இன்று முற்பகலில் மயக்கம் ஏற்பட்டு அவர் உயிரிழந்தார்.