ராமதாசுக்கு ஏதாவது ஆனால் தொலைத்து விடுவேன்- பாசத்தில் பொங்கிய அன்புமணி

அன்புமணி
அன்புமணி
Published on

ராமதாசுக்கு ஏதாவது ஆனால் தொலைத்து விடுவேன் என அன்புமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடந்த 5ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்த அன்புமணி, மருத்துவமனை விரைந்த போதும் ராமதாஸை சந்திக்கவில்லை. ஐசியூவில் இருந்ததால் சந்திக்க முடியவில்லை என அன்புமணி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று உத்தண்டியில் பாமக நிர்வாகிகள் மத்தியில் பேசிய அன்புமணி, ராமதாஸ் உடல்நிலை தொடர்பாக கூறுகையில், மருத்துவர் ஐயா உடல் நிலை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். சோதனை செய்ததில் ஒன்றும் இல்லை. சிலர் போன் செய்து ஐயாவிற்கு உடம்பு சரியில்லை வந்து பாருங்கள், ஐயாவிற்கு உடல் நிலை சரியில்லை வந்து பாருங்கள் என அழைத்துள்ளனர். ரொம்ப அசிங்கமா இருக்கு. ராமதாஸை வைத்து உடன் இருப்பவர்கள் டிராமா செய்கிறார்கள்.

ஐயாவிற்கு 87 வயது ஆகிறது. அவருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டுள்ளது. எந்தவித இன்பெக்ஷன் ஏற்படக்கூடாது. ஆனால் யார் யாரோ உள்ளே வந்து பார்த்துட்டு போகிறார்கள்.

ஐயா என்ன எக்ஷிபிஷனா.? ஐயாவுடைய உயிர், ஐயாவுடைய பாதுகாப்பு முக்கியம். ராமதாசுக்கு ஏதாவது என்றால் தொலைத்து விடுவேன். நான் இருக்கும் போது காரிடார் பக்கம் கூட யாரையும் விட மாட்டேன். இப்போ கதவை கூட தட்டுவதில்லை. நேராக உள்ளே செல்கிறார்கள். தூங்கவிடுவதில்லை, பாத்ரூமில் இருந்தால் கூடா ஐய்யா போன் என கொடுக்கிறார்கள் என அன்புமணி விமர்சித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com