தமிழ் நாடு
திரைப்படப் பாடகர் மனோவின் வீடு சென்னை, வளசரவாக்கத்தில் இருக்கிறது. அருகில் உள்ள விளையாட்டுப் பயிற்சி மையத்துக்கு வந்துசெல்லும் இருவரை மனோவின் இரண்டு மகன்களும் அவர்களின் நண்பர்களும் நேற்று தாக்கியதாகப் பிரச்னை எழுந்துள்ளது.
இதில் தாக்கப்பட்ட கிருபாகரன் எனும் இளைஞரும் இன்னொரு சிறுவனும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்படி, வளசரவாக்கம் ராதா நிழற்சாலையில் உள்ள பாடகர் மனோவின் வீட்டுக்குச் சென்று காவல்துறையினர் அவரின் மகன்களைத்தேடினர். ஆனால் இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.
அவர்களுடன் தாக்குதலில் ஈடுபட்ட விக்ரம், தர்மா ஆகிய இருவரை போலீசார் கைதுசெய்தனர்.