அமைச்சர்  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

தென்மாவட்ட மழை வெள்ள சேதம்: விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ. 208 கோடி ஒதுக்கீடு!

தென்மாவட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ. 208 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் 2024-25ஆம் நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக இன்று வேளாண் துறைக்கான தமிழக அரசின் தனி நிதி நிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்...' என்ற திருக்குறளுடன் தன் நிதிநிலை அறிக்கை உரையைத் தொடங்கிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் விவசாயிகள் வாழ்வாதாரத்தை வளத்தை நோக்கி இட்டுச்செல்லும் பட்ஜெட் இது என்றார்.

நிதிநிலை அறிக்கை அறிவிப்புகள்:

கடந்த 2 ஆண்டுகளில் 1.5 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த டிசம்பரில் தென்மாவட்டங்களில் பெய்த மழையால் ஏற்பட்ட சேதத்தால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும். இதற்காக ரூ. 208 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

10,000 விவசாயிகளுக்கு தலா இரண்டு மண்புழு உரப்படுக்கைகள் வழங்கிட ரூ. 6 கோடி மானியம்.

25 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 4,436 கோடி பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com