செளமியா அன்புமணி
செளமியா அன்புமணி

தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி... பா.ம.க. வேட்பாளர் மாற்றம்!

தருமபுரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த அரசாங்கம் என்பவருக்குப் பதிலாக செளமியா அன்புமணி போட்டியிடுவார் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அவற்றில் காஞ்சிபுரம் தவிர்த்து ஒன்பது தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று காலையில் அறிவிக்கப்பட்டனர்.

தருமபுரி தொகுதியின் வேட்பாளராக அரசாங்கம் என்பவர் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”2024 மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தருமபுரி மக்களவைத் தொகுதியில் அரசாங்கம் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அவர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி போட்டியிடுவார்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com