சிறப்பு டெட் தேர்வு தேதி அறிவிப்பு!

Special TET exam
சிறப்பு டெட் தேர்வு
Published on: 

பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு டெட் தேர்வு, வரும் டிசம்பர் 20ஆம் தேதி நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

கடந்த ஜூலை 4,5ஆம் தேதிகளில் நடத்தப்பட்ட சிறப்பு டெட் தேர்வின் முடிவுகள், கடந்த 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 2.17 லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதிய நிலையில், 1.10 லட்சம் பேர் தோல்வியடைந்தனர். நடந்துமுடிந்த டெட் தேர்வில் தோல்வியடைந்த ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு டிசம்பரில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

"பணியில் உள்ள ஆசிரியா்களுக்கான டெட் தோ்வு டிசம்பர் 20-ஆம் தேதி நடத்தப்படும். அன்றைய தினம் காலை பட்டதாரி ஆசிரியா்களுக்கான தாள்-2 தோ்வும், பிற்பகலில் இடைநிலை ஆசிரியா்களுக்கான தாள்-1 தோ்வும் நடைபெறும். இத்தோ்வுக்கு அக்டோபர் 27 முதல் நவம்பா் 19ஆம் தேதி வரை ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்." என்று கூறப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com