மே 20 அன்று 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு!

மாணவர்கள்
மாணவர்கள்
Published on

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வரும் 20ஆம் தேதி அன்று வெளியிடப்படுகிறது. 

தலைமைச்செயலகத்தில் இத்தகவலை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். 

அமைச்சர் அலுவலகத்தில் பதவியேற்றுக்கொள்வதற்கு முன்னரே அவர் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து முதலமைச்சர் விஜய்யுடன் அவர் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். 

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதைக் கூறினார். 

மத்திய அரசின் பிஎம்ஸ்ரீ திட்டம் குறித்த மாநில அரசுக்கு என்ன நிலைப்பாடு எனக் கேட்டதற்கு, அடுத்தடுத்த கூட்டங்களீல் இதுகுறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.

த.வெ.க.வுக்கும் இந்த அரசுக்கும் இரு மொழிக் கொள்கைதான் என்றும் அமைச்சர் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com