ஆம்ஸ்ட்ராங் வீட்டில் ஸ்டாலின்!
படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொற்கொடியை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை இரவு படுகொலை செய்யப்பட்டார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலையும் கண்டனத்தையும் தெரிவித்தனர்.
அவரது உடலை கட்சி அலுவலகத்திலேயே அடக்கம் செய்வதற்கு அனுமதி கோரி அவரின் மனைவி பொற்கொடி நீதிமன்றத்தை நாடினார். அவரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் அதற்குப் பதிலாக மாற்று இடத்துக்கு வேண்டுமானால் அனுமதி தரலாம் என்றது.
அதைத் தொடர்ந்து, திருவள்ளூரில் உள்ள பொத்தூர் கிராமத்தில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னை, அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு இன்று காலை நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரின் மனைவி பொற்கொடிக்கு ஆறுதல் தெரிவித்தார். ஆம்ஸ்ட்ராங்கின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மலர் மரியாதை செலுத்தினார்.