
சென்னை கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலினும், பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய்யும் இன்று வேட்புமனு தக்கல் செய்தனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை தொடங்கியது.
இந்த நிலையில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து நாளை முதல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
விஜய் வேட்புமனு தக்கல்
பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் விஜய், வியாசர்பாடி தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாவிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
அவருக்கு மாற்று வேட்பாளராக வடசென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் சிவா வேட்மனு தாக்கல் செய்துள்ளார்.
இதனிடையே, திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் விஜய் ஏப்ரல் 2ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் நாதக தலைவர் சீமான் காரைக்குடியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.