சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை!

சாலமன் பாப்பையா
சாலமன் பாப்பையாபடம்: பா. லெனின்
Published on

மதுரையில் நேற்று காலமான பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட பாப்பையா, நேற்று காலையில் மயக்கம் அடைந்து உயிரிழந்தார். 

அவருடைய மறைவுக்கு முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலிய பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கிறித்துவ முறைப்படியான சமயச் சடங்குகளுக்குப் பிறகு, அன்னாரின் உடல் இன்று அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, அரசு மரியாதை வழங்கவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிய நிலையில், தமிழ்நாட்டு அரசின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், “ சாலமன் பாப்பையா அவர்கள் தமிழ் இலக்கிய உலகிற்கு  ஆற்றிய பங்களிப்பைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று (12.09.2026) நடைபெறும் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com