சுதந்திரப் போராட்ட வீரர் அஞ்சலை அம்மாள் சிலை திறப்பு நிகழ்வு
சுதந்திரப் போராட்ட வீரர் அஞ்சலை அம்மாள் சிலை திறப்பு நிகழ்வு

சுதந்திரப் போராட்ட வீரர் அஞ்சலை அம்மாள் சிலை திறப்பு!

சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளின் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தார்.

சுதந்திரப் போராட்ட தியாகியும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான அஞ்சலை அம்மாளுக்கு சிலை நிறுவப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கடலூர் காந்தி பூங்காவில் அமைக்கப்பட்ட அஞ்சலை அம்மாளின் திருவுருவ சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், சாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அஞ்சலி அம்மாள் யார்?

அஞ்சலை அம்மாள் சிறுவயது முதல் சுதந்திரப் பற்றுமிக்கவராக திகழ்ந்தார். 1921 ஆம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கிய போது அதில் கலந்து கொண்டு தமது பொது வாழ்க்கையை தொடங்கினார்.

சென்னையில் நடைபெற்ற ஆங்கிலேய படைத் தளபதி ஜேம்ஸ் நீல் சிலை அகற்றும் போராட்டம், கடலூரில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகம், அந்நிய ஆடை எதிர்ப்பு போராட்டம், 1940 ஆம் ஆண்டு நடைபெற்ற தனிநபர் சத்தியாகிரக போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றதற்காக சிறை தண்டனை பெற்றார்.

அஞ்சலையம்மாள் விடுதலைப் போராட்டத்திற்காக தனது குடும்பச் சொத்துக்களையும், குடியிருந்த வீட்டையும் விற்று, நாட்டிற்காக தியாகம் செய்தார். “தென்னாட்டின் ஜான்சி ராணி” என்று மகாத்மா காந்தியடிகளால் அழைக்கப்பட்ட அஞ்சலையம்மாள், மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றியவர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com