தமிழ் நாடு

கோயில்களின் நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் விஜய் தலைமையிலான அரசாங்கம் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
இன்றைய ஆளுநர் உரையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
”கோயில் சொத்துகள், அறக்கட்டளை வருவாய் அனைத்தையும் முழுமையாகத் தணிக்கை செய்வதற்கும் கணக்குகளை வெளிப்படையாகவும் கணினிமயமாகவும் கொண்டுவருவதர்கும் நடவடிக்கை எடுக்கப்படும். முந்தைய காலங்களில் நிலவிவந்த நிர்வாக முறைகேடுகள் முற்றிலும் களையப்பட்டும் கோயில்களின் அசையும், அசையா சொத்துகள் அனைத்தும் அதன் புனிதமான நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுவது இந்த அரசால் உறுதிசெய்யப்படும்.” என்று சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.