நீட் மறுதேர்வு - கோவை மாணவி தற்கொலை!

girl died of suicide due to neet re-exam fear
தற்கொலை செய்துகொண்ட மாணவி அனுகீர்த்தனா.
Published on

நீட் மறுதேர்வு பயத்தால் கோவை மாணவி அனுகீர்த்தனா தற்கொலை செய்துகொண்டார்.

கோவையின் கோவைப்புதூரில் உள்ள பாரூக் நகரைச் சேர்ந்தவர் செந்தில்பிரபு. இவர் டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

19 வயதான மூத்த மகள் அனுகீர்த்தனா, பிளஸ் 2 முடித்தபின்னர் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்துள்ளார். இரண்டு முறை நீட் தேர்வு எழுதிய மாணவி, அதில் தோல்வியடைந்துள்ளார்.

மூன்றாவது முறையாக இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வையும் இவர் எழுதியிருந்தார். நடப்பாண்டு நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தினால், நடைபெற்ற நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது.

மறுதேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்காக படித்துக்கொண்டிருந்தார்.

மறுதேர்வை நினைத்து பயந்த அனுகீர்த்தனா இன்று தன்னை மாய்த்துக்கொண்டார்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை குறித்த எண்ணம் வந்தால், மாநில தற்கொலைத் தடுப்பு உதவி எண் 104-ஐத் தொடர்புகொள்ளலாம்.

logo
Andhimazhai
www.andhimazhai.com