மதுரை பல்கலை.க்கு மாநில அரசின் நிதி ரூ.2 கோடியாகக் குறைப்பு- சு.வெங்கடேசன் எம்.பி. ஆதங்கம்!

Madurai kamaraj university
மதுரை காமராசர் பல்கலை. By LIC Habeeb at ml.wikipedia, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=11728062
Published on

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்கு மாநில அரசு வழங்கும் நிதி 8 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டிருப்பதற்கு மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் அதிருப்தி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அவர் இன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடித விவரம்:

“ மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தமிழகத்தின் இரண்டாவது பெரிய பல்கலைக்கழகம் என்பது மட்டுமல்ல தென் தமிழகத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்றாகும். மகா பல்கலைக்கழகத்தின் வரம்பிற்குட்பட்ட 112 கல்லூரிகளில் ஏறத்தாழ மாணவர்கள் பயின்று வருகின்றனர். மகா பல்கலைக்கழகத்தின் சீரிய செயல்பாட்டிற்காக 20 ஆம் ஆண்டு யுஜிசி A என்ற உயர்தர சான்றிதழ் வழங்கியுள்ளது எனவே. இன்றளவும் Cach தமிழகத்தின் உயர் கல்வி முன்னேற்றத்திற்கு மகா பல்கலைக்கழகத்தின் பங்கு அளப்பரியது

ஆனால் சமீப காலமாக இந்த பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் நிர்வாகச் சூழல் பல்கலைகழகத்தின் நிதி பற்றாக்குறையால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் அனைத்துப் பல்கலைக்கழகங்களும் தங்களது சொந்த மற்றும் அரசு நிதி ஆதாரங்களை கொண்டு நடத்தப்படுகின்றன தொலைதூரக் கல்வி இயக்கத்தின் வருவாய் வீழ்ச்சி மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளின் வளர்ச்சியாய் ஏற்பட்ட தேர்வு கட்டளை இழப்பின் காரணமாக மகா பல்கலைக்கழகத்தின் சொந்த நிதி ஆதாரங்கள் வெகுவாக பலவீனமடைந்துள்ளன

பல்கலைக்கழகத்தில் 119 ஆசிரியர்களும் காலிப்பணியிடம் நிர்வாக அலுவலர்களும் காலிப்பணியிடம் 57 6ய பணியாற்றி வருகின்றனர் இது தவிர 181 க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் மற்றும் 23 தற்காலிக பணியாளர்களுக்கு சம்பனம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்கான நிதி பல்கலைக்கழகத்தின் சொந்த நிதியிலிருந்து மட்டுமே பெறப்படுவதால் பல்கலைக்கழகத்தின் நிதி பற்றாக்குறை படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது

இந்த நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு கடந்த வருடம் வழங்கப்பட்ட ரூ.58 கோடி மாநில அரசு நிதி நடப்பு நிதியாண்டில் வெறும் ரூ.8 கோடியாக குறைக்கப்பட்டிருப்பது நிதி பிரச்சினையை தீவிரமடையச் செய்துள்ளது

அரசு நிதி சுமார் 80 கோடி அளவிற்கு வெட்டப்பட்டுள்ளதன் காரணமாக, பல்கலைக்கழகம் இந்த கல்வியாண்டில் சுமார் 7 மாதங்களுக்கு மட்டுமே சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதுதவிர பல்கலைக்கழக நிதி நெருக்கடியினால் உள்கட்டமைப்புப் பற்றாக்குறை, காலிப் பணியிடங்கள் போன்றவை பல்கலைக்கழகத்தின் ஆய்வு- கல்விப் பணிகளையும் நிர்வாகப் பணிகளையும் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளன.

இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண வலியுறுத்தி, ம.கா. பல்கலைக்கழக ஆசிரியர்கள் 5ஆவது நாளாக கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்திவருகின்றனர். இச்சூழலில், ம.கா. பல்கலைக்கழகத்திற்கான நிதி நெருக்கடியைச் சீர்செய்ய தமிழ்நாடு அரசின் நேரடி தலையீடு மிக அவசியம்.

இந்தப் பின்னணியில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ஆண்டு நிதித் தேவையை தமிழக அரசு ஏற்றிருப்பது போல இந்த ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கும் உடனடியாக ரூ 100 கோடி சிறப்பு நிதி வழங்க வேண்டுகிறேன்.

தஞ்சை பல்கலைக்கழக ஓய்வூதியதாரர்களுக்கான நிதியை தமிழக அரசு ஏற்றுள்ளது போல மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் ஓய்வூதிய நிதியை அரசு ஏற்க வழிவகை செய்ய வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்றி இலட்சோப இலட்சம் மாணவர்களும் பொதுமக்களும் பயன்பெறும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கல்வி - நிர்வாகச் சூழலைக் காக்கவேண்டும்.” என்று சு.வெங்கடேசன் அக்கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com