சுதர்சன நாச்சியப்பன் மறைவு!

Sudarsana nachiappan
சுதர்சன நாச்சியப்பன்
Published on

முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சுதர்சன நாச்சியப்பன் இன்று காலமானார்.

மாரடைப்பு காரணமாக சிவகங்கையில் உள்ள தன் இல்லத்தில் அவர் உயிரிழந்தார்.

உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார்.

இவர் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக கடந்த 1999ஆம் ஆண்டு தேர்தலில் சிவகங்கை தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த 2000ஆம் ஆண்டில் தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத் துறைத் தலைவராகவும், 2002ஆம் ஆண்டில் தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவராகவும், 2003-ஆம் ஆண்டில் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி கொறடாவாகவும் பதவி வகித்துள்ளார்.

மேலும், 2004ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகப் பணியாற்றினார்.

மாநிலங்களவை எம்.பி.யாக 2004ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை பதவி வகித்த இவர், மன்மோகன் சிங் அமைச்சரவையில் 2013 -14ஆம் ஆண்டில் வர்த்தகம், தொழில் துறை இணை அமைச்சராக பதவி வகித்தார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com