சென்னையில் கோடை மழை- குளிர்ந்த நகரம்!

சென்னையில் கோடை மழை- குளிர்ந்த நகரம்!
Published on

சென்னையில் இன்று முற்பகல் திடீரென மழை பெய்து, நகரைக் குளிர்வித்துவருகிறது. 

கடந்த இரண்டு நாள்களாகவே கோடை வெயிலின் கொடுமை தலைநகரைச் சுட்டெரித்த வண்ணம் இருந்தது. நேற்றும் இன்றும் ஆங்காங்கே வானம் மூடியபடியும் இருந்தது.

சில நாள்களாக புழுக்கமான நிலை நீடித்தது. இன்று முற்பகல் திடீரென நகரிலும் நகரைச் சுற்றிலும் பல இடங்களில் இடிமின்னலுடன் மழை பெய்தது.

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த மழையால் நகரமே குளிர்ந்ததைப் போல ஆனது.

கிண்டி, ஆலந்தூர், வடபழனி, கோயம்பேடு, அண்ணாநகர் என நகரின் பல பகுதிகளிலும், போரூர், ஐயப்பன்தாங்கல், அம்பத்தூர், ஆவடி என சுற்று வட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்துவருகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com