எஸ்.பி.வேலுமணி நியமனங்கள் செல்லாது- உச்சநீதிமன்றமும் உறுதிசெய்தது

S.P.Velumani
எஸ்.பி.வேலுமணி
Published on

முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது 54 இளநிலை உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அந்த நியமனங்கள் முறைகேடானவை எனப் புகார் எழுந்தது. 

விவகாரம், நீதிமன்றத்துக்கும் சென்றது. 

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அவர்கள் அனைவரின் நியமனங்களும் சட்டவிரோதம் எனக் கூறி அதிரடியாகத் தீர்ப்பளித்தது. 

அதை எதிர்த்து சம்பந்தப்படவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதில், இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், உயர்நீதிமன்றத் தீர்ப்பு சரிதான் என அறிவித்தது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com