விஜய்யை நான் புகழவில்லை - உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார்

Justice Sanjay Kumar
நீதிபதி சஞ்சய் குமார்
Published on: 

முதலமைச்சர் விஜய்யை, தான் புகழ்ந்து பேசவில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செங்கோட்டையனின் வெற்றிக்கு எதிரான வழக்கை, தான் விசாரித்தால் சரியாக வராது என்றும், அதை வேறு பட்டியலில் சேர்ப்பதாகவும் உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

" தமிழ்நாடு தொடர்பான ஒரு குற்ற வழக்கை அரசு வழக்கறிஞர் ஒத்திவைக்கக் கோரியபோது, நான் எனது கருத்தைக் கூறியிருந்தேன். உங்கள் முதலமைச்சர் வேகமாகச் செயல்பட விரும்பும்போது, நீங்கள் ஏன் வழக்கை ஒத்திவைக்கக் கோரி, மெதுவாகச் செயல்படுகிறீர்கள் என்ற பொருளில்தான் கூறினேன்.

ஆனால், தமிழ்நாட்டு முதலமைச்சரை நான் புகழ்ந்துபேசியதாகச் செய்திகள் பரவின. என் கூற்றைத் திரித்து சமூக வலைதளத்தில் பரப்பியிருந்தனர். இதுதொடர்பாக, சிங்கப்பூரில் இருந்தெல்லாம் எனக்கு குறுஞ்செய்திகள் வந்தன.

இவ்வாறான சூழ்நிலையில், த.வெ.க.வைச் சேர்ந்த செங்கோட்டையனின் வெற்றிக்கு எதிரான வழக்கை, நான் விசாரிப்பது தார்மீகமாக இருக்காது. எனவே, வேறு அமர்வில் வழக்கைப் பட்டியலிடப் பரிந்துரைக்கிறேன்." என்று நீதிபதி சஞ்சய் குமார் விளக்கமளித்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com