உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

ராஜேஷ்தாசைக் கைதுசெய்யத் தடை- உச்சநீதிமன்றம் உத்தரவு

கடந்த ஆட்சியில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஸ்தாசுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அவர் நீதிமன்றத்தில் சரண் அடையாமல் தலைமறைவானார். அவரைப் பிடிக்க முடியாத நிலையில் காவல்துறை இருந்துவந்தது. 

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி மனு தாக்கல்செய்தார். அதை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், அவரைக் கைதுசெய்ய தடை விதித்துள்ளது. 

வழக்கின் விசாரணையை வரும் ஜூலை மாதத்துக்குத் தள்ளிவைத்தது. இவ்வழக்கில் தமிழக அரசு பதிலளிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com