ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்குக்கு உச்சநீதிமன்றம் தடை!
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
முன்னைய முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் வருவாய்த் துறை அமைச்சராக ஐ. பெரியசாமி இருந்தபோது, அரசு வீடுகளை ஒதுக்கியதில் முறைகேடு செய்யப்பட்டதாக கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வழக்கு பதியப்பட்டது. வழக்கு விசாரணை நீடித்துவந்த நிலையில், இந்த ஆட்சி வந்ததும் அந்த வழக்கிலிருந்து ஐ.பெரியசாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், வழக்கிலிருந்து அவரை விடுவித்ததை மறுபரிசீலனை செய்யப்போவதாக உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார். அதையொட்டி நடைமுறைகளும் தொடங்கின.
இதை எதிர்த்து, பெரியசாமி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும்வரை, பெரியசாமிக்கு எதிரான வழக்கை விசாரிக்க இன்று உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.