கரூரில் அரசுப் பணி- உயர்நீதிமன்றத் தடைக்கு உச்சநீதிமன்றம் தடை!

Supreme court
உச்ச நீதிமன்றம்
Published on: 

கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி ஆணைகளை ரத்துசெய்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கடந்த ஆண்டு, கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

அவர்களில் 31 பேரின் குடும்பங்களைச் சேர்ந்த தலா ஒருவருக்கு, கருணை அடிப்படையில் அரசுப் பணிக்கான நியமன ஆணையை முதல்வர் விஜய் வழங்கினார்.

கட்சி நிகழ்வில் உயிரிழந்தவர்களுக்கு அரசுப் பணி வழங்கியது தவறு என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டது. அதில், பணி நியமனம் அரசமைப்புச்சட்ட விதிகளுக்கு மாறானது என்று அரசுப் பணி நியமன ஆணையை ரத்துசெய்யப்பட்டது.

அந்தத் தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

“ ஒரு துயர சம்பவத்தில் மக்கள் உயிரிழந்தபோது, அவர்களுக்கு உதவ பண இழப்பீடு அல்லது வேலை வழங்கவும் அரசு முடிவெடுத்தால், அதில் உங்களுக்கு என்ன பிரச்னை? ஒரு குடும்பத்தின் ஒரே ஆதரவாக இருந்தவர் உயிரிழந்தால், அவரது மகனுக்கோ அல்லது மகளுக்கோ அரசு வேலை கொடுக்கக்கூடாதா?” என்று உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com