கவின் கொலை- மைத்துனர் சுர்ஜித்துக்கும் ஜாமின்!

ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் குமார்
ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் குமார்
Published on: 

நெல்லையில் பொறியாளர் கவின் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரின் காதலியின் தம்பி சுர்ஜித்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று நிபந்தனைப் பிணை வழங்க உத்தரவிட்டது.   

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியைச் சேர்ந்த கவின் செல்வகுமார், கடந்த 2025 ஜூலை 27 அன்று அவரின் காதலி சித்த மருத்துவர் சுபாசினியின் தம்பியால் நெல்லையில் படுகொலை செய்யப்பட்டார். காரணம், கவின் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் எனும் நிலையில், பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சுபாசினியை அவர் காதலித்து திருமணம் செய்யவிருந்ததுதான் என்பது பிரச்னை.

இதில், சம்பவத்தன்று கவினைக் கொன்றுவிட்டு அவரது மாமா முறையான ஜெயபால் என்பவரின் குவாரியில் போய் சாட்சியங்களைக் கலைத்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

கவின் கொலைக்கு முன்னர் அவரை போலீஸ்காரர்களான பெண்ணின் தாயார் கிருஷ்ணகுமாரியும் அவரின் கணவர் சரவணனும் மிரட்டியதாகவும் சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்தது.

ஆனாலும் அவர்கள் இருவரும் சாதியநோக்கில் இதில் செயல்பட்டதற்கான ஆதாரம் இல்லையென விசாரணை தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையிலேயே உயர்நீதிமன்றம் பிணை வழங்கியது.

அதைத் தொடர்ந்து, அவர்களின் மகன் சுர்ஜித்துக்கும் பிணை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com