தமிழ் நாடு
தமிழக அமைச்சரவை இன்று மாற்றம்?... புதியவர்களுக்கு வாய்ப்பு!
தமிழக அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அறிவிப்பு மாலை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அமைச்சரவையிலிருந்து மூன்று முக்கிய மூத்த அமைச்சர்கள் விடுவிக்கப்பட இருப்பதாகவும், மேலும் புதிதாக மூன்று அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்றும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்படும் என்றும் தெரிகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த வார இறுதியில் அமெரிக்கப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், இன்று மாலை தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.