“திமுகவின் அடிமை கூடாரமாக தமிழ்நாடு காங்கிரஸ்…” நிர்வாகி திடீர் ராஜினாமா!

சூர்ய பிரகாசம்
சூர்ய பிரகாசம்
Published on

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை எதிர்ப்பு தெரிவிப்பதால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் சொத்து பாதுகாப்பு குழு மற்றும் செயற்குழு உறுப்பினர் சூர்ய பிரகாசம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சூர்ய பிரகாசம் வெளியிட்ட அறிக்கை: “திமுகவின் அடிமைகள் கூடாரமாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை மாற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தீவிர முயற்சி செய்கிறார். தமிழக அரசின் கடன் சுமை சுமார் 10 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்பதை திமுக அரசே தன்னுடைய 2025 பட்ஜெட் அறிக்கையில் ஒத்து கொண்டுள்ளதை மறந்து பிரவின் சக்கரவர்த்தி, உண்மைக்கு மாறாக திமுக அரசின் மீது பழிபோடுவதாக பிரவின் சக்கரவர்த்தி மீது வசைபாடி, வரும் தேர்தலில் வெகுஜன திமுக எதிர்ப்பால், படுதோல்வி அடையப் போகும் திமுகவோடு சேர்ந்து காங்கிரஸும் படுதோல்வி அடையாமல் இருக்கவும், தமிழக வெற்றிக் கழகத்துக்கு தமிழக வாக்காளர்களிடம் வீசும் விஜய் ஆதரவு பேரலையை மற்றும் பிரகாசமான வெற்றி வாய்ப்பைக் கருத்தில் கொண்டு, தவெகவுடன் தேர்தல் கூட்டணி அமைத்தால் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற காங்கிரசாரின் நீண்டகால கனவை நனவாக்க போராடும் காங்கிரஸ் தொண்டர்களை தற்குறிகள் என்று ஊடகங்களில் வெளிப்படையாக அவமானப்படுத்திய செல்வப்பெருந்தகை தலைமையின் கீழ் வேலை செய்ய என் சுயமரியாதை இடம் கொடுக்காததால், இன்று முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் பதவியை நான் ராஜினாமா செய்வது மட்டும் அல்லாமல் காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் பதவியிலும் இருந்து ராஜினாமா செய்கிறேன்.” இவ்வாறு சூர்ய பிரகாசம் தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com