பா.ஜ.க.வில் மீண்டும் தமிழிசை- வரவேற்ற அண்ணாமலை
பா.ஜ.க.வில் மீண்டும் தமிழிசை- வரவேற்ற அண்ணாமலை

மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்த தமிழிசை... வரவேற்ற அண்ணாமலை!

ஆளுநர் பதவியிலிருந்து விலகிய தமிழிசை செளந்தரராஜன் மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.

தெலுங்கானா - புதுச்சேரி மாநில ஆளுநர் பதவியிலிருந்து தமிழிசை செளந்தரராஜன் அண்மையில் விலகினார். முழு நேர அரசியலுக்கு மீண்டும் வர இருப்பதாகவும் கூறினார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று தகவல்கள் பரவிய நிலையில், இன்று அவர் பா.ஜ.க.வில் மீண்டும் இணைந்துள்ளார்.

சென்னை தியாகராயர் நகரில் உள்ள பா.ஜ.க. மாநில அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தன்னை மீண்டும் பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார்.

பழைய உறுப்பினர் எண் கொண்டை அட்டையே தமிழிசைக்கு வழங்கப்பட்டது. உறுப்பினர் அட்டையை வழங்கிய அண்ணாமலை தமிழிசையைக் கட்டியணைத்து வரவேற்றார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com