டாஸ்மாக் : தி.மு.க. அரசுக்கும் த.வெ.க.வுக்கும் வித்தியாசமில்லை - தமிழிசை காட்டம்

Tamilisai Soundararajan
தமிழிசை செளந்தரராஜன்
Published on: 

தி.மு.க. அரசை விமர்சித்து பாட்டிலுக்கு 10 ரூபாய் என்று பாடிய த.வெ.க., இன்று அதை அங்கீகரித்து உள்ளதாக மூத்த பா.ஜ.க. தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

"இன்றைய ஆட்சியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி இருக்கிறது. ஆனால், தி.மு.க.விற்கு இதை எதிர்த்துப் பேசுகிற தார்மீக உரிமை எதுவும் இல்லை. ஏனெனில், இன்று நடந்துகொண்டிருக்கும் அனைத்தும் தி.மு.க. ஆட்சியிலும் நடந்தவைதான். எனவே, இன்றைய அரசாங்கம் அனைத்து வகைகளிலும் தோல்வியைத் தழுவி இருக்கிறது.

எதை முறைபடுத்துகிறார்களோ இல்லையோ, டாஸ்மாக்கை முறைப்படுத்திவிடுகிறார்கள். பாட்டிலுக்கு 10 ரூபாய் என்று பாட்டுப் பாடியவர்கள், இன்று மதுபாட்டில்களுக்கு ரூ.10 கட்டணம் வாங்குவதை அங்கீகரித்துவிட்டார்கள். அநியாயம் என்று சொன்ன ரூ.10, இன்று நியாயப்படுத்தப்பட்டுள்ளது.

எந்தத் துறையில் கவனம் செலுத்துகிறார்களோ இல்லையோ, டாஸ்மாக் துறையில் கவனம் செலுத்தி விடுகிறார்கள். போதைதான் அத்தனை குற்றத்திற்கும் காரணம். குழந்தைகள் தாக்கப்படுவதற்கும், கடத்தப்படுவதற்கும் போதைதான் காரணம். எனவே, தி.மு.க. அரசிடமிருந்து த.வெ.க. வேறுபடுத்திக் காட்டுகிறது என்று கூறமுடியாது. எனவே, போதையைக் கட்டுப்படுத்த வேண்டும்." என்று தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram