கர்நாடக கட்டட விபத்தில் இறந்த தமிழர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி!

bangalore building collapse
பெங்களூர் கட்டட விபத்து
Published on: 

கர்நாடக மாநிலம், பெங்களூரில் கனமழையால் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் இருவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். நிதியுதவியும் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து இன்று அரசுத் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: 

” கர்நாடக மாநிலம், பெங்களூரு, ஹென்னூரில் கடந்த 22.10.2024 அன்று பிற்பகலில் பெய்த கனமழையின் காரணமாக கட்டுமானப்பணி நடந்துகொண்டிருந்த கட்டடம் எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்த விபத்தில் 8 நபர்கள் உயிரிழந்தனர்.

மேலும், இவ்விபத்தில் தமிழ்நாட்டிலிருந்து கட்டுமானப் பணிக்காகச் சென்றிருந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், சத்தியராஜ் ஆகிய இருவரும் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன்.

இந்த விபத்தில் உயிரிழந்த மணிகண்டன், சத்தியராஜ் ஆகியோரின் குடும்பத்தினருக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். 

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.” என்று அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com