மகளிர் உரிமைத்தொகை பயனாளிகள் நீக்கம் - தமிழக அரசு விளக்கம்!

Women entitlement grant scheme beneficiaries removed
மகளிர் உரிமைத் தொகை பயனாளிகள் நீக்கம்
Published on: 

மகளிர் உரிமைத் தொகை பெறும் பயனாளிகள் பெருமளவில் நீக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள விளக்கம்:

"மகளிர் உரிமைத் தொகைக்காக முதல், இரண்டாம் கட்டங்களில் சேர்க்கப்பட்ட தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ. 1000 நிதி உதவி அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கான உரிமைத்தொகை ரூ. 1 கோடியே 29 லட்சத்து 97 ஆயிரத்து 568 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் கடந்த 14ஆம் தேதி வரவு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரண்டாம் கட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட 17 லட்சம் பயனாளிகளில் இருந்து 50% பேர் இந்தத் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது முற்றிலும் தவறான தகவலாகும். இரண்டாம் கட்டப் பயனாளிகளை பெருமளவில் நீக்க, எந்தவொரு சிறப்பு நீக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

பயனாளிகள் யாரேனும் இறந்திருந்தாலோ, திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியற்றவர்களாக மாறியிருந்தாலோ அல்லது தாங்களாகவே திட்டத்தில் இருந்து விலக விருப்பம் தெரிவித்தாலோ அத்தகைய விவரங்களின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் உரிய முறையில் பயனாளிகளின் பட்டியல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

எனவே, மகளிர் உரிமைத் தொகை பயனாளிகள் பெருமளவில் நீக்கம் என்ற தகவல் உண்மைக்கு புறம்பானது." என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram