தூய ஆல்கஹால் இரட்டை வரியால் தமிழகத்துக்கு பாதிப்பு- ஜிஎஸ்டி கூட்டத்தில் எதிர்ப்பு!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Published on

மதுபானம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் உயர் தூய்மை ஆல்கஹாலுக்கு இரட்டை வரி விதிக்க ஜி.எஸ்.டி. குழுக் கூட்டத்தில் மத்திய அரசு முன்மொழிவை வைத்தது. இதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

சரக்கு - சேவை வரி ஜிஎஸ்டி குழுவின் 52ஆவது கூட்டம் புதுடெல்லியில் இன்று நடைபெற்றது. அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்களும் இதில் கலந்துகொண்டனர்.

இதில், சாதகமான முக்கிய முடிவாக, சிறுதானிய மாவு உணவு தயாரிப்புகளுக்கான வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. சிறுதானிய மாவு உணவு தயாரிப்பு ஜிஎஸ்டி விகிதத்தை குறைப்பதால் சத்தான உணவு பொருட்கள் மக்களை சென்றடையும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா நம்பிக்கை தெரிவித்தார்.

உயர் தூய்மை ஆல்கஹாலை அதிகம் இறக்குமதி செய்யும் மாநிலமாக தமிழ்நாடு உள்ள நிலையில், உயர் தூய்மை ஆல்கஹால் மீது இரட்டை வரி விதிப்பதால், தமிழகம் பெரும் வருவாய் இழப்பைச் சந்திக்கும் என்றும் இதில் நிர்வாக நடைமுறை சிக்கலும் இருக்கிறது எனவும் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

இதேசமயம், சிறுதானியப் பொருள் மீதான ஜி.எஸ்.டி. வரியைக் குறைப்பதை தமிழகம் ஏற்றுக்கொள்கிறது என தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com